ADDED : மே 05, 2024 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், : பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த 29ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 1ம் தேதி முதல், யாக சாலை பூஜை துவங்கி நடந்தது.
நேற்று முன்தினம் 3ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை நடந்தது.
பின், 7:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 7:20 மணிக்கு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.