/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாழைத்தோட்டம் சேதம்; குடிப்பிரியர்கள் அட்டூழியம்
/
வாழைத்தோட்டம் சேதம்; குடிப்பிரியர்கள் அட்டூழியம்
ADDED : ஆக 06, 2024 07:03 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே வயல்வெளியில் மது அருந்துவதை கண்டித்ததால், வாழை கன்றுகளை குடிப்பிரியர்கள் சேதப்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு சொந்தமான வாழை தோட்டம். அப்பகுதியில் சாலையோரம் உள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தன்று வாழைத்தோட்டத்தில் குடிப்பிரியர்கள் சிலர் மது அருந்தியுள்ளனர். அவர்களை செந்தில் அங்கிருந்து விரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குடிபிரியர்கள், பழிவாங்கும் நோக்கில் நள்ளிரவு நேரத்தில் வந்து வாழைத்தோட்டத்தில், வாழைக்கன்றுகளை வெட்டி சேதப்படுத்தினர்.
நேற்று காலை வயலுக்கு வந்த செந்தில், வாழை கன்றுகள் வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.