/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
ADDED : மே 10, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: குறிஞ்சிப்பாடி நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் உட்பட பிளாஸ்டிக் பொருட்களை வணிக நிறுவனங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.
இதனையடுத்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி, இளநிலை உதவியாளர் முருகவேல் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
பின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.