/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கீழக்குறிச்சியில் வடிகால் அமைக்க பூமி பூஜை
/
கீழக்குறிச்சியில் வடிகால் அமைக்க பூமி பூஜை
ADDED : ஆக 23, 2024 12:29 AM

வேப்பூர் : வேப்பூர் அருகே கீழக்குறிச்சியில் ரூ. 5.50 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நல்லூர் வடக்கு ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் நிதியில் ரூ. 5.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் ராணி முருகேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யாவு, பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., நல்லூர் வடக்கு ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் சக்திவிநாயகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
அப்போது, நல்லூர் வி.சி., வர்த்தகரணி ஒன்றிய அமைப்பாளர் மணிகண்டன், வார்டு உறுப்பினர் லட்சுமி, கிராம முக்கியஸ்தர் கோவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

