/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நக்கரவந்தன்குடி ஊராட்சியில் ரேஷன் கடை கட்ட பூமி பூஜை
/
நக்கரவந்தன்குடி ஊராட்சியில் ரேஷன் கடை கட்ட பூமி பூஜை
நக்கரவந்தன்குடி ஊராட்சியில் ரேஷன் கடை கட்ட பூமி பூஜை
நக்கரவந்தன்குடி ஊராட்சியில் ரேஷன் கடை கட்ட பூமி பூஜை
ADDED : செப் 05, 2024 04:08 AM

கிள்ளை, : சிதம்பரம் அருகே ரூ. 13 லட்சம் மதிப்பில், புதியதாக ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நடந்தது.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நக்கரவந்தன்குடி ஊராட்சியில் சிதம்பரம் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் புதியதாக ரேஷன் கடை கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது.
ஒன்றியசெயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் தியாகராஜன் வரவேற்றார். பூமி பூஜையை, பாண்டியன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார்.விழாவில், குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், தச்சக்காடு ஊராட்சிதலைவர் மகேஷ், ஊராட்சி துணைத் தலைவர் வைத்தியலிங்கம், நிர்வாகிகள் பாலமுருகன், பெர்னாட்ஷா, மகேஸ்வரிஉட்பட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலாளர் பார்த்திபன், நன்றி கூறினார்.