/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக்குகள் மோதல்; வாலிபர் படுகாயம்
/
பைக்குகள் மோதல்; வாலிபர் படுகாயம்
ADDED : பிப் 22, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி; பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்
குள்ளஞ்சாவடி அடுத்த தீர்த்தனகிரி, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன், பரமசிவம், 31. இவர் இரு தினங்களுக்கு முன் புலியூர்- அம்பலவாணன்பேட்டை சாலையில் பைக்கில் சென்றார். அப்போது பின்புறமாக வேகமாக வந்த மற்றொரு பைக் ஒன்று இவர் மீது மோதியது.
அதில், பின்புறமாக வந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த புலியூர் காலனியை சேர்ந்த, பிரகாஷ்ராஜ், 23, என்பவர் படுகாயமடைந்தார். உடன் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.