தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைக்குகள் மோதல்; மாணவர் பலி

பைக்குகள் மோதல்; மாணவர் பலி

பைக்குகள் மோதல்; மாணவர் பலி


ADDED : ஜூன் 16, 2024 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் பள்ளி மாணவன் இறந்தார்.

நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தை சேர்ந்த சிவபெருமாள் மகன் சிந்தனைசெல்வன்,20;இவர் நேற்று முன்தினம் பைக்கில் பண்ருட்டி சென்று ஊர் திரும்பினார்.அப்போது பைக்கின் பின்னால் அருணாசலம் மகன் கபிலன்,20,ராம்குமார் மகன் கீர்த்திவாசன்,15 ஆகியோர் உட்கார்ந்து வந்தனர்.

வானமாதேவி அருகே சென்ற போது எதிரே சி.என்.பாளையத்தை சேர்ந்த சசிகுமார் மகன் சதீஷ்குமார்,21 ஓட்டி வந்த பைக் சிந்தனைசெல்வன் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நான்கு பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கீர்த்திவாசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us