/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பஸ் நிலையத்தில் பைக்குகள் பறிமுதல்
/
கடலுார் பஸ் நிலையத்தில் பைக்குகள் பறிமுதல்
ADDED : செப் 01, 2024 06:10 AM

கடலுார், : கடலுார் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பைக்குகள், போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலுார் பஸ் நிலையத்திற்கு 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கிறது. பஸ் நிலையத்தில் விதிமுறைகளை மீறி பைக், கார் போன்ற வாகனங்கள் சர்வ சாதாரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
அதையடுத்து, எஸ்.பி., ராஜாராம் பஸ் நிலையத்திற்குள் வாகனங்கள் செல்ல தடை விதித்து, அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கடலுார் போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ., மகாலிங்கம் தலைமையில் போலீசார் பஸ் நிலையத்திற்குள் நின்ற 20க்கும் மேற்பட்ட பைக்குகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்து வந்தனர். பைக்குகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.