/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரு தரப்பு மோதல்; 11 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு மோதல்; 11 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 20, 2024 04:18 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கவணை காலனி மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு, வரி வசூல் செய்வது தொடர்பாக, விழாக் குழுவினர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வராசு குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 17ம் தேதிமாரியம்மன் கோவில் முன், ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினரை, செல்வராசு மகன் வெங்கடேசன், அப்பு, ரவி, மனைவி கண்ணம்மா,மகள் தனம், ஆகியோர் திட்டியுள்ளனர். இதனை ராமன் மனைவி ராதா, 50, தட்டிக் கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
புகாரின் பேரில், இருதரப்பை சேர்ந்த 11 பேர் மீது, மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.