ADDED : மே 01, 2024 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் மக்கள் மையம் சார்பில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை தாங்கினார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினர் அரங்கராமானுஜம் சிறப்புரையாற்றினார்.
தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமையில் பாரதிதாசன் கவிதைகளில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா, சமுதாய உணர்வா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
அதில், பேச்சாளர்கள் கனகா சதீஷ்குமார், அனுசுயா, ஆசிரியர் பயிற்றுனர் வெங்கடேசன், வட்டாரக் கல்வி அலுவலர் மன்னர்மன்னன், ஆசிரியர்கள் செந்தில்குமார், உமா ஆகியோர் பேசினர்.
ஓவியர் முருகன், தமிழ் ஆர்வலர்கள் செல்வமணி, பாலசுப்ரமணியன், மகேந்திரன், ரத்தினவேலு, செல்லவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாராயணன் நன்றி கூறினார்.