/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் வளர்ச்சிக்கு குரல் கொடுப்பேன் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி உறுதி
/
சிதம்பரம் வளர்ச்சிக்கு குரல் கொடுப்பேன் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி உறுதி
சிதம்பரம் வளர்ச்சிக்கு குரல் கொடுப்பேன் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி உறுதி
சிதம்பரம் வளர்ச்சிக்கு குரல் கொடுப்பேன் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி உறுதி
ADDED : ஏப் 16, 2024 11:01 PM

சிதம்பரம், - சிதம்பரம் தொகுதியின் வளர்ச்சிக்காக லோக்சபாவில் குரல் கொடுப்பேன் என, பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி உறுதியளித்தார்.
சிதம்பரம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சிதம்பரம், அண்ணாமலை நகர், கிள்ளை, பரங்கிப்பேட்டை, பு.முட்லுார், புதுச்சத்திரம் உட்பட பல்வேறு பகுதி கிராமங்களுக்கு சென்று, தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, வீதி வீதியாக மக்களை சந்தித்து, மத்திய அரசின் சாதனைகள் கூறி வருகிறார்.
பிரசாரத்தில் அவர் பேசுகையில், சிதம்பரம் தொகுதி எம்.பி., யாக 5 ஆண்டுள் இருந்த திருமாவளவன் மக்களை சந்திக்கவில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து லோக்சபாவில் பேசாமல், மத்திய அரசை விமர்சிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
தொகுதி மேம்பாட்டிற்காக அவர் எதையும் செய்யவில்லை. சிதம்பரத்தில் எம்.பி., அலுவலகம் கூட இல்லை என்பதுதான் வேதனை.
எனக்கு ஓட்டளித்தால், சிதம்பரம் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன், தொகுதியில், விவசாய ஆராய்ச்சி மையம் கொண்டு வந்து, விளை பொருட்களை உரிய விலையில் விற்க வழிவகை ஏற்படுத்துவேன்.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பேன். வெள்ளாற்றில் தடுப்பணை அமைக்கப்படும். மத்திய மோசடி அரசு, பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளது. எனவே, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டளித் வெற்றி பெற செய்ய வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தின் போது பா.ஜ., மாவட்ட தலைவர் மருதை, சிதம்பரம் தொகுதி பொறுப்பாளர் கேப்டன் பாலசுப்பிரமணியன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அருள், தமிழ்ழகன், மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், இளைஞரணி தலைவர் சதீஷ்குமார், விக்னேஷ், ரவி ஐயப்பன், மகேஷ், கண்ணன், சந்தோஷ், சரவணன், பாலகிருஷ்ணன், கொளஞ்சி, கூட்டணி கட்சியான பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் ,த.மா.க., வக்கீல் வேல்முருகன், ரஜினிகாந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.

