/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி வாக்குறுதி
/
சிதம்பரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி வாக்குறுதி
சிதம்பரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி வாக்குறுதி
சிதம்பரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி வாக்குறுதி
ADDED : ஏப் 14, 2024 06:05 AM

ஸ்ரீமுஷ்ணம்: சிதம்பரம் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி, பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேத்தியாத்தோப்பு, சோழத்தரம், புடையூர், வட்டத்தூர், நந்தீஸ்வரமங்கலம், பாளையங்கோட்டை, வடக்குக்பாளையம், காவாலக்குடி, பேரூர், கூடலையாத்தூர், பக்கிரி மானியம், தண்டேஸ்வரநல்லூர், நகரப்பாடி, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு அவர் பேசியது:
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 3 வது முறையாக பதவியேற்பது உறுதி. அவ்வாறு பதவியேற்கின்ற நிலையில் சிதம்பரம் தொகுதியை, ஒரு முன்மாதிரி தொகுதியாகவும், சர்வதேச அளவில் ஆன்மிக சுற்றுலா மற்றும் சுற்றுலா மையமாகவும் மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். வெற்றி பெற்றவுடன் தொகுதியின் அடிப்படை பிரச்னைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும்.
தி.மு.க., ஆட்சியில், ஆட்சியாளர்களின் வசதிக் கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மக்களின் தேவையறிந்து திட்டப்பணிகளை மேற்கொள்ள தி.மு.க., அரசு தவறிவிட்டது. எந்த ஒரு திட்டத்திலும் தி.மு.க., குடும்பம் சார்ந்த நலன் மட்டுமே மேலோங்கி உள்ளது. ஆனால், பிரதமர் மோடி கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் நாட்டு மக்களின் நலத்தை முன்னிறுத்தி செயல்படுத்துவதாக இருக்கும்.
அந்த அடிப்படையில் தான் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மத்திய அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கான திட்டங்களாக இருக்கும்.
சிதம்பரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆசி பெற்று ஓட்டு கேட்டு வந்துள்ளேன். தாமரை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., மாவட் தலைவர் மருதை, பா.ம.க மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், அ.ம.மு.க., மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய தலைவர் வடமலை, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிவராமன், கார்த்திகேயன், வணங்காமுடி, இளையராஜா, தினேஷ், பா.ம.க., நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் மோகன், சிவராமசேது, சங்கர், மணியரசன், நடராஜன், ராஜதுரை, கலைமணி, தர்மராஜ், நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

