/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., சந்தர்ப்பவாத கூட்டணி: சி.வி.சண்முகம் சாடல்
/
பா.ஜ., சந்தர்ப்பவாத கூட்டணி: சி.வி.சண்முகம் சாடல்
ADDED : மார் 28, 2024 04:36 AM

பண்ருட்டி : பா.ஜ., கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது என, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து அறிமுகக் கூட்டம் நேற்று காடாம்புலியூரில் நடந்தது. கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
அ.தி.மு.க., -தே.மு.தி.க., கூட்டணி ஒற்றுமையான கூட்டணி. அ.தி.மு.க., வின் பலத்தை காண்பிக்க தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். கடலுார் தொகுதியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், பா.ஜ., கூட்டணியில் மற்றொரு வேட்பாளரும் போட்டியிடுகிறார்.
நெய்வேலியில் 3 வது சுரங்கம் அமைக்கக் கூடாது. 25 கிராம மக்கள் வெளியேற்றக்கூடாது என அ.தி.மு.க., போராட்டம் நடத்தி வருகிறது. மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் பா.ஜ., கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
என்.எல்.சி., 3வது சுரங்கம் திட்டம் கைவிடப்படுமா என தேர்தல் அறிக்கையில் அவர்கள் வெளியிடுவார்களா. இது என்.எல்.சி., பிரச்னை இல்லை. கடலுார் மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்னை. பா.ஜ., கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. ஆதாய கூட்டணி.
இவ்வாறு அவர் பேசினார்.