/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பார்வையற்ற மாணவர்கள் இசைக்கருவிக்கு விண்ணப்பிக்கலாம்
/
பார்வையற்ற மாணவர்கள் இசைக்கருவிக்கு விண்ணப்பிக்கலாம்
பார்வையற்ற மாணவர்கள் இசைக்கருவிக்கு விண்ணப்பிக்கலாம்
பார்வையற்ற மாணவர்கள் இசைக்கருவிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 18, 2024 11:12 AM
கடலுார்: நவீன வாசிக்கும் கருவிகள் தேவைப்படும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளிகள், கல்லுாரிகளில் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணாவர்களுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் நவீன வாசிக்கும் கருவிகள் வழங்கப்படுகிறது.
அனைத்து உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லுாரியில் பயிலும் பார்வையற்ற மாணவர்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள், நல அலுவலகம், அறை எண்.113, கலெக்டர் அலுவலக வளாகம், கடலுார் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் வாயிலாகவோ விண்ணப்பித்து, நவீன வாசிக்கும் கருவிகளை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.