/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்: அன்புமணி பங்கேற்பு
/
பா.ம.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்: அன்புமணி பங்கேற்பு
பா.ம.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்: அன்புமணி பங்கேற்பு
பா.ம.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்: அன்புமணி பங்கேற்பு
ADDED : ஏப் 04, 2024 12:53 AM

பண்ருட்டி: பண்ருட்டியில், கடலுார் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சானை, அக்கட்சி தலைவர் அன்புமணி அறிமுகப்படுத்தி பேசினார்.
பண்ருட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலுாரில் போட்டியில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் அறிமுக பொதுக்கூட்டம் நடந்தது. பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நிர்வாக குழு தர்மலிங்கம், டாக்டர் கவுரிசங்கர், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ரவிசந்திரன், பா.ஜ., மாவட்ட தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் வினோத்குமார், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் சக்திவேல், ஓ.பி.எஸ்.அணி ஞானசேகரன், த.மா.க.நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பா.ம.க., தலைவர் அன்புமணி சிறப்புரையாற்றினார்.
த.மா.க. மாவட்ட செயலாளர் கணேசன், நகர தலைவர் கனகராஜ், பா.ம.க,மாநில உழவர் இயக்க தலைவர் ஆலயமணி, மாநில துணைத் தலைவர் வைத்தியலிங்கம், பா.ம.க., நகர செயலாளர் வேங்கடசாமி, ஆனந்த், உதயா, மாநில செயற்குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன்றிய செயலாளர் சதாசிவம், ஐயப்பன், ஐயனார், அறிவழகன், மூர்த்தி, சுரேஷ், பா.ஜ.க. நகர செயலாளர் மோகன், ரவி, வக்கீல் ராமலிங்கம், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

