/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறந்தவர்களுக்கு 'பூத் சிலிப்' நெல்லிக்குப்பத்தில் 'கூத்து'
/
இறந்தவர்களுக்கு 'பூத் சிலிப்' நெல்லிக்குப்பத்தில் 'கூத்து'
இறந்தவர்களுக்கு 'பூத் சிலிப்' நெல்லிக்குப்பத்தில் 'கூத்து'
இறந்தவர்களுக்கு 'பூத் சிலிப்' நெல்லிக்குப்பத்தில் 'கூத்து'
ADDED : ஏப் 14, 2024 05:45 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதியில் இறந்தவர்கள் பெயருடன், ஓட்டுப்போட அதிகாரிகள் பூத் சிலிப் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் அடிக்கடி வாக்காளர் திருத்தம், சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது, இறந்தவர்கள் பெயர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படும். ஆனால், நெல்லிக்குப்பம் பகுதியில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாத நிலை உள்ளது. இதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்கள் பெயர்கள் கூட வாக்காளர் பட்டியலில் உள்ளது.
உதாரணமாக நெல்லிக்குப்பம் நகராட்சி கந்தசாமி தெருவில் வசித்த பக்கரிசாமி மனைவி மேனகா இறந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதே தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ரவி இறந்து ஓராண்டு ஆகிறது. அவரது குடும்பத்தினர் நகராட்சியில் இறப்பு பதிவு செய்து இறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளனர். ஆனால் இவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யபடவில்லை.
இறந்த இருவருக்கும் நகராட்சி ஊழியர்கள், தேர்தலில் ஒட்டுப்போட பூத் சிலிப் வழங்கியுள்ளனர். அதிகாரிகளின் இதுபோன்ற அலட்சிய செயலால் கள்ள ஓட்டு போடும் அபாயம் உள்ளது. உள்ளாட்சிகளில் இறப்பு பதிவு செய்யும் போதே வாக்காளர் பட்டியலில் இறந்தவரின் பெயரை நீக்கவும் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற குழப்பம் இருக்காது.

