ADDED : ஆக 20, 2024 12:58 AM

விருத்தாசலம்: தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், விருத்தாசலத்தில் நடந்தது.
மாவட்டத் தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார்.
செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் திருமலை, துணைத் தலைவர்கள் ராஜாராமன், ரவிச்சந்திர சிவாச்சாரியார், வெங்கடேசன், மாநில மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடப்பதை கண்டிப்பது. இந்தாண்டு முடிவில் நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவில் திரளாக பங்கேற்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் விருத்தகிரி நன்றி கூறினார்.

