/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலை உணவுத் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
/
காலை உணவுத் திட்டம் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 15, 2024 11:46 PM

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கோவிலானுார் அரசு உதவி பெறும் ஆர்.சி., துவக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
விழாவிற்கு, கூடுதல் கலெக்டர் சரண்யா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி வரவேற்றார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், பங்குத்தந்தை லாரன்ஸ், ஊராட்சித் தலைவர் வனிதா ஆரோக்கியம் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் வரவேற்றார்.
அமைச்சர் கணேசன், திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவுகளை பரிமாறினார். பின்னர், கோவிலானுார் ஊராட்சி பயனாளிகள் 20 பேருக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் ஆணையை வழங்கினார்.
டி.இ.ஓ., துரைபாண்டியன், ஒன்றிய சேர்மன் மலர் முருகன், துணை சேர்மன் பூங்கோதை, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனககோவிந்தசாமி, பேரூர் செயலாளர் செல்வம், சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி, ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் பங்கேற்றனர். டி.இ.ஓ., (துவக்கப் பள்ளிகள்) சேகர் நன்றி கூறினார்.