ADDED : டிச 07, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை, மேலக்காட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவலை நேற்று காலை பூசாரி அசோக் திறக்க சென்றபோது, வௌிப்புற கதவு பூட்டு உடைந்து கிடந்தது. மேலும் கோவிலில் இருந்த உண்டியல் திறந்து கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணம் திருடு போயிருந்தது. சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.