/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நெல்லிக்குப்பத்தில் துணிகரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நெல்லிக்குப்பத்தில் துணிகரம்
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நெல்லிக்குப்பத்தில் துணிகரம்
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நெல்லிக்குப்பத்தில் துணிகரம்
ADDED : ஆக 01, 2024 06:37 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அஜீத். சரக்கு வாகன டிரைவர். இவர், சில நாட்களுக்கு முன் லோடு ஏற்றிக்கொண்டு வெளியூர் சென்றார். இவரது மனைவி வினோதினி பண்ருட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நேற்று மாலை வீட்டுக்கு வந்த வினோதினி, வீட்டின் வெளி கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
இதுகுறித்து வினோதினி அளித்த புகாரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.