
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் ரோட்டரி சங்கம், மாவட்ட அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல பிரிவு ஆகியன சார்பில் தாய்ப்பால் வார விழா நடந்தது.
கடலுார் அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில், ரோட்டரி சங்கத் தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். டாக்டர் நாகராஜன், நிலைய மருத்துவ அதிகாரி கவிதா, டாக்டர்கள் கேசவன், செந்தில்குமார், முன்னாள் துணை இயக்குனர் நாகராஜன் ஆகியோர் தாய்ப்பால் அவசியம் குறித்து பேசினர். தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
விழாவில், முன்னாள் தலைவர்கள் மலை பூபாலன், நாகராஜன், ஜான்சன், செல்வம், வக்கீல் சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.