ADDED : ஆக 10, 2024 05:35 AM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: நெய்வேலி வடக்குத்து ரோட்டரி சங்கம், இந்திய குழந்தைகள் நல குழுமம் இணைந்து, உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழாவை, குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தினர்.
கலந்து கொண்ட, 90க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தொப்புள்கொடி பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.
தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து, இந்திய குழந்தைகள் நல குழும மாநில தலைவர் செந்தில் அறிவுரை வழங்கினார்.
குள்ளஞ்சாவடி மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன், டாக்டர் சுகன்யா, வடக்குத்து ரோட்டரி சங்க தலைவர் சண்முகவேல், செயலாளர் ராஜு, சாசன தலைவர் ஜெகன், ரோட்டரி நிர்வாகிகள் செல்வராசு, பாலகுரு, குமார், ரவிச்சந்திரன், மாயவேல், கீர்த்திகா சண்முகவேல், ரவிசேகர், அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
