/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை திட்டக்குடியில் பட்டப்பகலில் துணிகரம்

ADDED : மே 14, 2024 04:49 AM

திட்டக்குடி: திட்டக்குடியில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி வதிஷ்டபுரம், ராஜ்நகரில் வசிப்பவர் ஓம்பிரகாஷ்,42; ராஜஸ்தானை சேர்ந்த இவர் கடந்த 22 ஆண்டாக திட்டக்குடியில் கிளாஸ், பிளைவுட் கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் விடியற்காலை 5:00 மணிக்கு குடும்பத்துடன் சேலம், ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றவர், இரவு 11:00 மணிக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்கதவு தாழ்ப்பாள் உடைந்து திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 21சவரன் நகை, ரூ.55 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம்.
தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து, கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.