/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேந்திரக்கிள்ளையில் மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி
/
சேந்திரக்கிள்ளையில் மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி
ADDED : மே 25, 2024 01:23 AM

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே சேந்திரக்கிள்ளை மன்மதன் கோவிலில்மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை மன்மதன் கோவிலில், விவசாயம் தழைக்கவும், இளைஞர், இளம்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் மன்மதனுக்கு காப்பு கட்டி, 15 நாட்கள் கழித்து மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
இந்தாண்டு கடந்த 9ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 7.00 மணிக்கு மன்மதனுக்கு சிறப்புஅபிஷேக ஆராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அதையொட்டி காலை 6.00 மணிக்கு கோவில் குளத்தில் இருந்து, கலசத்தில் தண்ணீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்து, மன்மதன் எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

