/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
/
பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
பஸ் நிலைய நடைபாதை ஆக்கிரமிப்பு: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
ADDED : ஏப் 28, 2024 04:24 AM

கடலுார், : கடலுார் பஸ் நிலையத்தில் நடை பாதை ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும் என, ஆர்.டி.ஓ., அபிநயா வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கடலுார் பஸ் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி கடைகள் உள்ளன. தினசரி 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ் நிலையத்தில் நடை பாதையை வியாபாரிகள் ஆக்கரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் திறந்தவெளியில் வெயிலில் நின்று கடும் அவதியடைகின்றனர். இதனால், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, கடலுார் ஆர்.டி.ஓ., அபிநயா பஸ் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தார். பின், நடை பாதையை ஆக்கரமித்து வைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இரண்டு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்படும் என, ஆர்.டி.ஓ., அபிநயா எச்சரிக்கை விடுத்தார்.

