/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் கண்ணாடி உடைப்பு நான்கு பேருக்கு வலை
/
பஸ் கண்ணாடி உடைப்பு நான்கு பேருக்கு வலை
ADDED : மே 28, 2024 05:26 AM
பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டையில், அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்த நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த குத்தாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழ்வளவன், 21; கலைச்செல்வன், 21; கட்டட தொழில் செய்து வந்தனர். இவர்கள் கடந்த 24ம் தேதி, இரவு 11:00 மணியளவில் இருவரும் பரங்கிப்பேட்டையில் இருந்து பைக்கில் குத்தாபாளையம் நோக்கி சென்றனர்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வரும்போது, கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி வந்த அரசு டவுன் பஸ், பைக் மீது மோதியது. இந்த விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆத்திரமடைந்த, குத்தாப்பாளையம் கிராமத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பஸ்சின் முன், பின் மற்றும் சைடு கண்ணாடிகளை கல்லால் தாக்கி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து நேற்று கண்டக்டர் விக்னேஷ் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து, குத்தாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹரி, இளையராஜா, கவுதமன், இன்பரசு மற்றும் சிலர் மீது வழக்குப்பதிந்து, தேடிவருகிறார்.