ADDED : செப் 14, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம், செப். 15–
வடக்குவெள்ளுரில் சாலை விபத்தில் தடுப்பு கட்டையில் மோதி என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.
நெய்வேலி இந்திரா நகர் மாற்றுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமார், 52; இவர் என்.எல்.சி., சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் மந்தாரக்குப்பம்–நெய்வேலி டவுன்ஷிப் சாலை, வடக்குவெள்ளுர் பகுதியில் சென்று திரும்பு போது நிலை தடுமாறி தடுப்பு கட்டையில் மோதி படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
. இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
