விநாயகர் சதுர்த்தி வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
விநாயகர் சதுர்த்தி வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : செப் 14, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளும், பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.
கடலுார் பாடலீஸ்வரர், புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார், திருப்பாதிரிப்புலியூர் வேத விநாயகர், தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் மற்றும் சுற்றியுள்ள கோவில்களில் விநாயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
