ADDED : செப் 14, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம். செப்15–
நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரண்டு காலம் யாகசாலை பூஜைகளும் 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகமும் நடந்தது.
பூர்ணாஹீதி தீபாராதனை முடிந்து கலசங்களை ஊர்வலமாக எடுத்து கோவிலை வலம் வந்து விநாயகருக்கு கலசாபிஷேகம் நடந்தது.விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
.ரத்தினம் தெரு,திடீர்க்குப்பம் விநாயகர்,அருள்தரும் அய்யப்பன் கோவில் உட்பட பல கோவில்களில் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடந்தது.
