sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அழைப்பு! இலங்கைக்கு வேளாண், கட்டுமான பொருட்கள் அனுப்பலாம்

/

கடலுார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அழைப்பு! இலங்கைக்கு வேளாண், கட்டுமான பொருட்கள் அனுப்பலாம்

கடலுார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அழைப்பு! இலங்கைக்கு வேளாண், கட்டுமான பொருட்கள் அனுப்பலாம்

கடலுார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அழைப்பு! இலங்கைக்கு வேளாண், கட்டுமான பொருட்கள் அனுப்பலாம்


UPDATED : மார் 14, 2025 07:03 AM

ADDED : மார் 14, 2025 05:31 AM

Google News

UPDATED : மார் 14, 2025 07:03 AM ADDED : மார் 14, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் துறைமுகத்தில் இருந்து சிறிய கப்பல்கள் மூலம் சரக்குகள் இறக்குமதி, ஏற்றுமதி செய்ய தமிழ்நாடு கடல்சார் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் பல்வேறு முன்னெடுப்புகளின் பலனாக, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 2024 ஆகஸ்டு மாதம் முதல் துவக்கப்பட்டு, தற்போது 150 பயணிகள் பயணிக்கும் 'சிவகங்கை' என்ற கப்பல் வாரத்திற்கு 6 நாட்கள் (செவ்வாய் நீங்கலாக) இருவழிகளிலும் இயக்கப்பட்டு, வெற்றிகரமாக போக்குவரத்து நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு கடல்சார் வாரியம், மாலத்தீவு, இலங்கையிலுள்ள திரிகோணமலை, காங்கேசன் துறை மற்றும் பிற இடங்களுக்கு கடலுார், துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல், தோணிகளை இயக்கி சரக்கு கையாள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சந்தை நிலவரப்படி, இலங்கைக்கு வேளாண் பொருட்கள், கட்டுமான பொருட்கள் மற்றும் இதர நுகர்வுப் பொருட்கள் போன்ற 75,000 மெட்ரிக் டன் சரக்குகள் ஆண்டொன்றுக்கு கடல் வழியாக கையாள வாய்ப்புகள் இருப்பதாகவும், இது அடுத்துவரும் ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடலுார் துறைமுகத்தில் இருந்து யூரியா, நிலக்கரி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு பல மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. பிளைவுட் தயார் செய்யும் தேக்கு மரங்கள் பர்மாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. கடலுார் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள் (தோணிகள்), மிதவைகள் கையாளுவதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளுடன், கஸ்டம்ஸ், இமிகிரேஷன், சுகாதாரத்துறை ஆகிய துறைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. சரக்கு இறக்குமதி ஏற்றுமதியாளர்கள், முகவர்கள் மற்றும் மரக்கல மிதவை உரிமையாளர்கள் ஆகியோர் இத்துறைமுகத்தில் அமைந்துள்ள வசதிகளை பயன்படுத்தி, சாக்கு இறக்குமதி, ஏற்றுமதி செய்து பயன்பெறலாம்.

இத்துறைமுகத்தின் வாயிலாக சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி செய்வது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு துறைமுக அலுவலகத்தை 04142 238025, 238026 ஆகிய தொலைபேசி எண்கள் முலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us