தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திருநாரையூரில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

திருநாரையூரில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

திருநாரையூரில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு


UPDATED : அக் 03, 2026 01:49 AM

ADDED : அக் 03, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 01:49 AM ADDED : அக் 03, 2026 01:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அடுத்த திருநாரையூரில், நாட்டார்மங்கலம், ராஜிவ் காந்தி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற என்.எஸ்.எஸ்., முகாமின் நிறைவு விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் சுதா தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட இயக்குனர் அம்பேத்கர் முன்னிலை வகித்தார். உதவி திட்ட இயக்குனர் பிரபாகரன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினரான காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, போதை பொருள் மற்றும் செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து பொள்ளாப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவலோகநாதன், ரைட்ஸ் டிரஸ்ட் இயக்குனர் அன்புகாந்தி, பள்ளியின் பாதுகாப்பு அதிகாரி தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us