தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாஜி எஸ்.ஐ.,யிடம் மோசடி பலே ஆசாமிகள் இருவருக்கு வலை

மாஜி எஸ்.ஐ.,யிடம் மோசடி பலே ஆசாமிகள் இருவருக்கு வலை

மாஜி எஸ்.ஐ.,யிடம் மோசடி பலே ஆசாமிகள் இருவருக்கு வலை


UPDATED : அக் 03, 2026 01:49 AM

ADDED : அக் 03, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 01:49 AM ADDED : அக் 03, 2026 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலூர்: கறவை மாடுகள் வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரிடம் மோசடி செய்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

வடலூர், இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வராஜ்,63; ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர்.

இவரிடம், தெற்கு சேப்ளாநத்தம் பாலு மகன் செம்புலிங்கம், இந்திரா நகர் சாந்தி நகர் முத்துபிள்ளை மகன் திருஞானம் ஆகியோர் கறவை மாடுகள் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்த இரு மாடுகளை முன்பணம் மட்டும் கொடுத்துவிட்டு ஓட்டிச் சென்றனர். அதன்பிறகு செல்வராஜ் பலமுறை கேட்டும், இருவரும் மாட்டிற்கான முழு பணத்தை தராமலும், கறவை மாடுகள் வாங்கி தராமல் ஏதேதோ காரணம் கூறி காலம் கடத்தி வந்தனர்.

இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து செம்புலிங்கம் மற்றும் திருஞானத்தை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us