/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரசாரத்திற்கு வரும் ஸ்டாலின் கடலுாரில் இன்று தங்குகிறார்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ADDED : ஏப் 05, 2024 06:24 AM

கடலுார் : சிதம்பரம் தேர்தல் பிரசாரத்திற்கு வரும் முதல்வர் ஸ்டாலின், கடலுாரில் இன்று இரவு தங்குகிறார்.
விழுப்புரத்தில் இன்று (5ம் தேதி) மாலை நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு, தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் விழுப்புரம் வி.சி., கட்சி ரவிக்குமார், கடலுார் காங்., விஷ்ணுபிரசாத் ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
அங்கிருந்து கார் மூலம் கண்டரக்கோட்டை, மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் வழியாக பிரசாரம் செய்தபடி வந்து, கடலுாரில் இரவு தங்குகிறார்.
நாளை (6ம் தேதி) காலை 6:00 மணிக்கு கடலுார் நகரில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, பொதுமக்களை சந்தித்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்கிறார். மாலை 6:30 மணிக்கு சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார்.
கடலுார் ஜட்ஜ் பங்களா தெரு தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள ஹெஸ்ட் ஹவுசில், முதல்வர் ஸ்டாலின் தங்குகிறார். அதற்காக, தனியார் பள்ளி வளாகத்தில் தார் சாலை போடப்படுகிறது. மேலும் பள்ளி மதிற்சுவர், வாயில் கேட் போன்றவைக்கு பெயிண்டிங் செய்யப்படுகிறது.
அவர் தங்கும் அறை புதுப்பிக்கப்பட்டு ஷோபா, சேர்கள் மற்றும் புதிய 'ஏசி' உள்ளிட் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட அதிகாரிகள், போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கண்காணித்து வருகின்றனர்.
முதல்வர் தங்கும் பகுதியில் நேற்று முதல் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.