ADDED : செப் 04, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த வடகரை ஊராட்சி, நந்திமங்கலம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஒன்றிய பொது நிதி 2 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக போர்வெல்லுடன் கூடிய மினி டேங்க் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.
கடந்த மாதம் போர்வெல் மோட்டார் பழுதானது.
அதனை ஊராட்சி நிர்வாகம் இதுவரை சீரமைக்காததால் அப்பகுதி மக்கள் குடிநீர் பெற மிகுந்த சிரமம் அடைவது தொடர்கிறது. எனவே, நந்திமங்கலத்தில் பழுதான மினிடேங்கை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.