/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிடப்பில் கால்வாய் பணி மக்கள் பரிதவிப்பு
/
கிடப்பில் கால்வாய் பணி மக்கள் பரிதவிப்பு
ADDED : ஆக 07, 2024 06:35 AM

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் இரண்டாவது தெருவில், 5 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க டெண்டர் விடப்பட்டது.
அதையடுத்து, பத்து நாட்களுக்கு முன்பு கால்வாய் அமைக்க சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது.
அதன்பிறகு பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், அப்பகுதி வீடுகளில் வசிப்போர், வீட்டிற்கு செல்லவும், வெளியே செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கால்வாய் அமைக்க டெண்டர் விட்டதோடு சரி, பணி நடக்கிறதா என, அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், கால்வாய் கூட வேண்டாம், பள்ளத்தை மூடினால் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர்.
இதேபோன்று, கடந்தமாதம் பாரதியார் தெருவில் கால்வாய் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டி பத்து நாட்களுக்கு பிறகே மக்கள் பிரச்னை செய்ததால் மூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.