/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சொத்து தகராறில் ஊராட்சித் தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது

ADDED : ஜூன் 01, 2024 04:20 AM
திட்டக்குடி : திட்டக்குடி அருகே சொத்துப்பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு குறித்து, ஊராட்சித் தலைவர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி உமாராணி,48; இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரைக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 26ம் தேதி உமாராணியின் வீட்டில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என அண்ணாதுரையின் மகனும், நெடுங்குளம் ஊராட்சித் தலைவருமான ராஜதுரை மற்றும் மணிகண்டன் ஆகியோர் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து, தடுக்க வந்த உமாராணியின் மகள் மீனாவின் முடியை பிடித்து இழுத்து தாக்கினர்.
இதில் காயமடைந்த மீனா திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து உமாராணி அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் அண்ணாதுரை, ராஜதுரை, மணிகண்டன், வசந்தா, சூர்யா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.