/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி பிரசாரம் மூவர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பிரசாரம் மூவர் மீது வழக்கு
ADDED : ஏப் 11, 2024 04:19 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்த மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் வி.சி., கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து, பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் கோவில் தெருவில், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி, விடுதலை தமிழ்புலி தலைவர் குழந்தை அரசன் ஆகியோர் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்தனர்.
இதுகுறித்து, சிதம்பரம் தொகுதி பறக்கும் படை அதிகாரி அனுஷாதேவி கொடுத்த புகாரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கிறார்.

