/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு
/
தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு
ADDED : செப் 10, 2024 12:40 AM
புவனகிரி : புவனகிரி அருகே வயலில் அரும்பு பறித்த போது ஏற்பட்ட பிரச்னையில் விவசாய கூலி தொழிலாளியை தாக்கிய இரு பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லான்பட்டினம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். விவசாய கூலி தொழிாலளியான இவர், அப்பகுதியில் வயலில் கூலிக்கு அரும்பு பறிக்க சென்றார். அப்போது, அங்கு அரும்பு பறிக்க வந்த ரவிச்சந்திரன் மனைவி ஜோதி மற்றும் பழனிவேல் மனைவி கிருஷ்ணம்மாள் ஆகியோருக்கும், குணசேகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில் இரு பெண்களும் சேர்ந்து, குணசேகரனை தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளனர்.
புகாரின் பேரில் புவனகிரி போலீசார், ஜோதி, கிருஷ்ணம்மாள் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.