/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு
/
முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 09, 2024 05:22 AM
கடலுார்: முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கடலுார் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் செந்தில்குமார் 34; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ராமு மகன் ரத்தினம் என்கிற கிருஷ்ணகுமார் 34; செந்தில்குமார் வீட்டு பக்கம் வளர்ந்துள்ள செடியை வெட்டுமாறு செந்தில்குமாரிடம், ரத்தினம் கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் செந்தில்குமார், மனைவி மகேஷ்வரி, தாய் தனலட்சுமி, தந்தை சுப்ரமணி ஒரு கோஷ்டியாகவும், கிருஷ்ணகுமார், இவரது மனைவி சிவசங்கரி, அன்பழகன் மனைவி இளவரசி, உறவினர் சான்றோர்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சங்கர் 34; ஒரு கோஷ்டியாகவும் தாக்கிக்கொண்டனர். இரு வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதில் செந்தில்குமார், கிருஷ்ணகுமார் இருவரும் காயம் அடைந்து கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செந்தில்குமார், கிருஷ்ணகுமார் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.