/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கல்
/
மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கல்
ADDED : ஆக 29, 2024 11:18 PM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அறக்கட்டளை சார்பில், ரொக்கப் பரிசுத்தொகைவழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், வள்ளலார் மற்றும் ராமசாமி படையாட்சியார் அறக்கட்டளை சார்பில், 1999ம் ஆண்டு தமிழக அரசு, உயர்கல்வித்துறை சார்பில், தலா 25 லட்சம் வைப்பு நிதி வைக்கப்பட்டு, 2000ம் ஆண்டு முதல் ஒவ்வொருதுறையிலும் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2022 - 2023ம் கல்வியாண்டில் முதல் மற்றும்இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. துணைவேந்தர் கதிரேசன் பங்கேற்று 95 மாணவ, மாணவிகளுக்கு, தலா 5 ஆயிரம் வீதம்,பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.
விழாவில் பதிவாளர் சிங்காரவேலன், புல முதல்வர்கள் விஜயராணி, அங்கையற்கண்ணி, குலசேகரப்பெருமாள், பாரி, கார்த்திகேயன், சவுந்திரபாண்டியன், ஸ்ரீராம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.