ADDED : ஜூலை 30, 2026 03:20 PM
வேப்பூர், ஜூலை 31-
வேப்பூர் அடுத்து புல்லுார் கிராமத்தில், கிராம மக்கள் சார்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை டி.எஸ்.பி., இயக்கி துவக்கி வைத்தார்.
வேப்பூர் அடுத்த புல்லூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராமத்தின் பாதுகாப்பு கருதியும், குற்றச்செயலில் ஈடுபடுவோரை கண்டறியவும் கிராம பசுமை அமைப்பு குழு சார்பில் கிராம தெருக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கிராம நுழைவு வாயில்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டது.
அதனை, டி.எஸ்.பி., பார்த்திபன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கிராம பசுமை அமைப்பு குழுவினரின் செயல்களை பாராட்டினார்.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி, தனிப்பிரிவு போலீஸ் சிவராஜ், கிராம பசுமை அமைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.
