ADDED : ஆக 22, 2024 01:48 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் குறுவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிகளுக்கு, தலைமை ஆசிரியர் லுார்து ஜெயசீலன் தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியர் ஆரோக்யதாஸ் வரவேற்றார். ஊராட்சி் தலைவர் தங்கராஜ் போட்டிகளை துவக்கி வைத்தார்.
குறுவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் 11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் 750 மாணவர்கள் பங்கேற்றனர். ஆண், பெண் இருபாலர்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடந்தது. உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர். முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். இருதயபிரகாசம் நன்றி கூறினார்.