/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடிகர் விஜய் அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கடலுாரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
/
நடிகர் விஜய் அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கடலுாரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நடிகர் விஜய் அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கடலுாரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நடிகர் விஜய் அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கடலுாரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ADDED : செப் 09, 2024 05:32 AM

கடலுார்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததால் கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் கடலுாரில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில்அரசியல் கட்சி துவங்கினார். நடிகர் விஜய் அரசியல் கட்சிக்கு டில்லி தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கட்சி பொது செயலாளர் புஸ்சி ஆனந்த், தலைமையில் நிர்வாகிகள்,தொண்டர்கள் நேற்று கடலுார் வண்டிப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் மஞ்சக்குப்பம் தர்க்கா , பீச்ரோடு கார்மேல் அன்னை சர்ச்சில் சிறப்பு பிராத்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சீனுராஜசேகர், ராஜ்குமார், அருண்ராஜ், ஆனந்த், அப்பாஸ், பாலு, ஆனந்த் உள்ளிட்ட மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது நிருபர்களிடம் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 30 ஆண்டுக்கு மேல் நடிகர் விஜய், ரசிகர் மன்றம் துவங்கி, பின்னர் தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு சேவை செய்து வந்தோம். கட்சி தலைவர் விஜய் அயராத உழைப்பு காரணமாக தமிழக வெற்றிக் கழகம் தலைமை தேர்தல் ஆணையத்தால் இன்று பதிவு செய்யப்பட்டு, அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் வழங்கியுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தலைவர் விஜய், மாநாடு குறித்து முறைப்படி தெரிவிப்பார் என அவர் தெரிவித்தார்.