/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜல்ஜீவன் திட்டம் குறித்து மேல் புவனகிரியில் மத்தியக்குழு ஆய்வு
/
ஜல்ஜீவன் திட்டம் குறித்து மேல் புவனகிரியில் மத்தியக்குழு ஆய்வு
ஜல்ஜீவன் திட்டம் குறித்து மேல் புவனகிரியில் மத்தியக்குழு ஆய்வு
ஜல்ஜீவன் திட்டம் குறித்து மேல் புவனகிரியில் மத்தியக்குழு ஆய்வு
ADDED : ஜூலை 22, 2024 01:25 AM

புவனகிரி : மேல்புவனகிரியில் ஒன்றியம் அம்பாள்புரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜல்ஜீவன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடலுார் மாவட்டத்தில் முழுவதுமாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தேர்வாகியுள்ளது.
இது குறித்து மத்தியக்குழுவினர் பல்வேறு பகுதி உள்ள கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன்படி கடலுார் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியத்தில் அம்பாள்புரம் உள்ளிட்ட சில ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது. மத்திய குழுவில் உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆய்வுக்குழு செயல் இயக்குனர் ஸ்ரீடிகேசிங், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீ மானார்பிரதீபபோர்போகியம் உள்ளிட்ட குழுவினர் நேற்று அம்பாள்புரம் கிராமத்தில் ஆய்வு செய்தனர். இக்குழுவினரை அம்பாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் விசுவேல்முருகன் தலைமையிலான பிரதிநிதிகள் வரவேற்றனர். பின் கிராம செய்யப்பட்டுள்ள பணிகளை காண்பித்து விளக்கினர்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ராஜவேல், உதவி செயற்பொறியாளர்கள் டார்வின், செல்வன் ஒன்றிய பொறியாளர் வசந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர் வாசுகி மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள்,சுய உதவி குழுவினர் உடன் இருந்தனர்.
கோப்புகளையும், கள ஆய்வு செய்த மத்தியக்குழுவினர் பொதுமக்களிடம் குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
சேத்தியாத்தோப்பு: புவனகிரி ஒன்றியத்தில் ஆணைவாரி, அம்மன்குப்பம், அகரஆலம்பாடி ஆகிய ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, துப்புரவு, கழிவரைகள் குறித்த தேசிய சுகாதார மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். குழுவினர் ஆணைவாரி கிராமத்தில் குடிநீர், சுகாதாரம், கழிவறைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து கிராம மக்களிடம் குடிநீர், சுகாதாரம் குறித்தும், தங்களது வீடுகளில் கழிவறைகள் உள்ளதா, அதனை பயன்பாட்டில் உள்ளதா என கேட்டறிந்தனர்.