/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை சி.இ.ஓ., பழனி எச்சரிக்கை

ADDED : மே 13, 2024 05:19 AM
கடலுார்: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடலுார் சி.இ.ஓ., பழனி சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளார்.
அவர், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை;
கடலுார் மாவட்டத்தில் கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பெரும்பாலான பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது என, தொடர் புகார்கள் வருகிறது.
தற்போது கடுமையான வெப்பம் நிலவும் காலத்தில் பள்ளிகளில் கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது பள்ளி கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதனால் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகள், கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.
மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
இதனை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் அறிக்கை அனுப்பியுள்ளார்.