/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோடைகால பயிற்சி நிறைவு மாணவர்களுக்கு சான்றிதழ்
/
கோடைகால பயிற்சி நிறைவு மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : மே 15, 2024 11:17 PM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடை கால பயிற்சி முகாம் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 29ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது.
இதில், தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, டென்னிஸ் என, 10 வகை விளையாட்டுகள் நடந்தது. முகாமில், 18 வயதுக்குட்பட்ட 508 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவ, மாணவிகளுக்கு சான்றிழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் நொய்லின் ஜான், தலைமை தாங்கி, முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சீருடை, சான்றிதழ் வழங்கினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் வரவேற்றார்.
விழாவில், தடகள சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், இறகுப்பந்து கழக பொருளாளர் சிவகுரு, மல்லர் கம்பம் கழகத் தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.