/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளலார் மெட்ரிக் பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ்
/
வள்ளலார் மெட்ரிக் பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ்
ADDED : ஆக 08, 2024 12:41 AM

பண்ருட்டி : சென்னையில் தமிழக கல்வித்துறை சார்பில் கடந்த பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கும் விழா நடந்தது.
அதில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்கு பள்ளி தாளாளர் சாரங்கபாணிக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்களை பள்ளி தாளாளர் சுப்ரமணியன், கல்விகுழு முன்னாள் தலைவர் திருமால்வளவன், செயலாளர் ராஜா, பொருளாளர் செந்தில்குமார், வள்ளலார் கல்லுாரி தாளாளர் ஜனார்த்தனன், கிட்ஸ் பள்ளி தாளாளர் சக்கரவர்த்தி, சி.பி.எஸ்.இ.பள்ளி தாளாளர் செல்வராஜ், இயக்குனர்கள் நடராஜன், கண்ணன், மணிவாசகம், திருவேங்கடம், ராஜேந்திரன், சரவணன், சரோஜா, காண்பராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர்.