நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி சாலையில் உள்ள பூங்காவில், 9 வயது பள்ளி மாணவி விளையாடிவிட்டு, சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர், மாணவியை நிறுத்தி பேசினர். அதில், ஒருவர் திடீரென மாணவியின் கழுத்தில் இருந்த அரை சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.