/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒரு மீட்டருக்கு இரண்டு முறை கட்டணம்; மின்வாரிய உத்தரவால் பொதுமக்கள் குழப்பம்
/
ஒரு மீட்டருக்கு இரண்டு முறை கட்டணம்; மின்வாரிய உத்தரவால் பொதுமக்கள் குழப்பம்
ஒரு மீட்டருக்கு இரண்டு முறை கட்டணம்; மின்வாரிய உத்தரவால் பொதுமக்கள் குழப்பம்
ஒரு மீட்டருக்கு இரண்டு முறை கட்டணம்; மின்வாரிய உத்தரவால் பொதுமக்கள் குழப்பம்
ADDED : ஜூலை 01, 2024 06:26 AM
நடுவீரப்பட்டு : நெல்லிக்குப்பம் கோட்ட மின்வாரியத்திற்குட்பட்ட அலுவலகத்தில் மீட்டருக்கான பணம் மீண்டும் கட்ட நிர்பந்தம் செய்யும் அதிகாரிகளால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்சாரவாரியம் வீட்டிற்கான மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் வீட்டுவரி, வி.ஏ.ஓ., சான்றுகள், பத்திரநகல் ஆகிய ஆவணங்களை பெற்று மின் இணைப்பு வழங்கி வருகிறது.
மேலும் பதிவுகட்டணம்,மின்இணைப்பு கட்டணம்,மின்சார மீட்டருக்கான கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை பெற்றுக்கொண்டு தான் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவது வழக்கம்.இந்த நடைமுறை பலஆண்டுகளாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 2007 ம் ஆண்டு மின்வாரிய அலுவலகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு மின் பயன்பாட்டாளரின் விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்தனர். அப்போது கம்ப்யூட்டரில் மின் உபயோகிப்பாளரின் விபரங்களை சரிவர பதிவு செய்யவில்லை.
இதனால் நெல்லிக்குப்பம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்திலும் கம்ப்யூட்டரில் மின்சார மீட்டருக்கான கட்டணம் பதிவு செய்யும் கட்டத்தில் எவ்வித கட்டணமும் கட்டவில்லை என பதிவு செய்துள்ளனர்.
ஒரு வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கும் போது மீட்டருக்கான கட்டணம் வாங்காமல் மின் இணைப்பு வழங்கியதே கிடையாது.
தற்போது மின்சார மீட்டருக்கு ரூ.765 பெற்றுக்கொண்டு தான் மின் இணைப்பு வழங்கி வருகின்றனர்.
இதனால் தற்போது 2007ம் ஆண்டிற்கு முன் மின் இணைப்பு பெற்ற மின் உபயோகிப்பாளரிடம் தற்போதுள்ள மீட்டர் கட்டணமான ரூ.765ம் சேர்த்து,வரும் மாத மின்கட்டணத்தில் பணம் கட்டுமாறு கம்ப்யூட்டரில் பதிவு செய்துள்ளனர்.இதனால் பொதுமக்கள் ஒரே மீட்டருக்கு இரண்டு தடவை கட்டணம் கட்ட வேண்டுமா என கலக்கத்தில் உள்ளனர்.
இதனால் தினமும் மின்வாரிய அதிகாரிகளுக்கும்,பொதுமக்களுக்கும் தகராறு ஏற்பட்டு வருகிறது. 2007க்கு முன் கட்டிய மீட்டருக்கான பணம் என்னாகியது என புரியாமல் குழப்பமாக உள்ளது.
இதுசம்மந்தமாக மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தால்,பணத்தை கட்டி விட்டு செல்லுமாறு மிரட்டுகின்றனர்.
ஆகையால் பொதுமக்கள் என்ன செய்வது என தெரியாத நிலை உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.