/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருதுார் செல்லியம்மன் கோவிலில் 30ல் தேரோட்டம்
/
மருதுார் செல்லியம்மன் கோவிலில் 30ல் தேரோட்டம்
ADDED : மே 22, 2024 12:44 AM
புவனகிரி : மருதூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.
புவனகிரி அருகே மருதுாரில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உற்சவரான செல்லியம்மன் ஆண்டு முழுவதும் நீர் நிறைந்த கிணற்றில் பாதுகாக்கப்படுகிறது.
தேரோட்ட திருவிழாவின்போது, கிணற்றில் இருந்து வெளியே எழுந்தருள செய்து, முடிந்ததும் மீண்டும் கிணற்றில் வைப்பதும் வழக்கம்.
அந்த வகையில் வரும் 30ம் தேதி தேரோட்டம் நடப்பதையொட்டி, 29ம் தேதி இரவு கிணற்றில் இருந்து அம்மனை வெளியில் எடுத்து பல்வேறு அபிேஷக ஆராதனைகள் செய்யப்படுகிறது. மறுநாள் 30ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது.
தேரோட்ட திருவிழாவையொட்டி, நேற்று முன் தினம் கொடியேற்றப்பட்டது. நேற்று இரவு ஊர் எல்லையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

